Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானப்படையின் மிக்-29 அரபிக்கடலில் விழுந்தது!

விமானப்படையின் மிக்-29 அரபிக்கடலில் விழுந்தது!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (18:12 IST)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 ரக விமானம் ஜாம்நகர் கடற்கரைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அரபிக்கடலில் விழுந்தது. எனினும் அதன் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஐஎன்எஸ் வல்சுரா (INS Valsura) படை தளத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்ட மிக்-29 (MiG-29) ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததாகவும், எனினும் விமானி லெப்டினன்ட் தீர் (Lieutenant Dheer) உயிர் தப்பியதாகவும் கூறினார்.

இன்று மதியம் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஜாம்நகரில் இருந்து 50 கி.மீ தொலையில் உள்ள கடல்பகுதியில் விமானம் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.என்.எஸ் வல்சுரா கடற்படையினர் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜனவரியில் மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹஸிமரா பகுதியில் மிக்-27 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மிக்-21 ரன விமானம் விபத்துக்குள்ளானது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil