வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்று வந்த புத்த மதத் தலைவர் தலாய்லாமா, மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
அவர் (தலாய்லாமா) பூரண குணமடைந்து விட்டதாகவும், போதிய ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் சிகிச்சையளித்த மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தற்போது 73 வயதாகும் தலாய்லாமா, கடந்த 4 நாட்களுக்கு முன் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான லீலாவதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்துள்ள தலாய்லாமா இம்மாதத்தின் முதல் 15 நாட்கள் வரை மும்பையிலேயே தங்க உள்ளதாகவும், அந்த காலகட்டத்தில் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டில் இதே மருத்துவமனையில் வயிற்று வலிக்காக தலாய்லாமா சிகிச்சை பெற்றார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.