நமது நாட்டின் முதல் ஐ.பி.டி.வி. (இணைய தள டி.வி.) ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிராமப் புறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆகாஷ் கண்ணாடி இழை கேபிள் நிறுவனமும், பி.எஸ்.என்.எல் நிறுவனமும் இணைந்து தங்களது ஐ.பி.டி.வி. சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகில் உள்ள குல்காஸ் என்ற கிராமத்தில் அறிமுகம் செய்துள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் மட்டும் தங்களது ஐ.பி.டி.வி. சேவையைத் துவங்குவதாக அறிவித்திருந்த இந்த இரண்டு நிறுவனங்களும், தற்போது ராஜஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் அந்தச் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்தச் சேவையைப் பெறும் மக்கள், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்) இணைப்பு மூலமாகத் தாங்கள் விரும்பும் 120 சேனல்களையும், திரைப்படத் தொகுப்பையும் பார்க்க முடியும்.