Publish Date: Sat, 23 Aug 2008 (20:18 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (20:17 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதி ஒருவர் பலியானார்.
குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ள லோலாப் என்ற இடத்தில் இந்த மோதல் நடத்துள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதியின் விவரம் வடக்கு காஷ்மீரில் வசிக்கும் அஜிஸ் வாகே என்று தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏ.கே.56 துப்பாக்கி ஒன்று, 122 சுற்று துப்பாக்கி தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள், செல்பேசி ஒன்று ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.