Publish Date: Sat, 23 Aug 2008 (18:13 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (18:13 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ராஜூரி மாவட்ட எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக நமது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெரி பகுதியில் உள்ள ஜப்ரான் கலி என்ற இடத்தில் நேற்றிரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை நமது படையினரைக் குறிவைத்துப் பாகிஸ்தான் படையினர் எறிகணைகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் படையினர் பலமுறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருந்தாலும், இந்திய ராணுவத்தினர் பெரிய அளவில் பதிலடி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.