Publish Date: Sat, 23 Aug 2008 (16:13 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (16:13 IST)
சிங்கூரில் பதற்றமான சூழ்நிலை நீடிக்குமானால் சிறிய வகைக் கார் தொழிற்சாலைத் திட்டத்தைக் கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என்று ரத்தன் டாடா எச்சரித்துள்ளது பற்றி மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் விவாதித்தனர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் மேற்குவங்கம் வந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொல்கத்தாவில் இன்று அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்தார்.
இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் ரத்தன் டாடாவின் எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.