Publish Date: Sat, 23 Aug 2008 (13:18 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (13:16 IST)
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரண்டு நாள் பயணமாக மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு இன்று சென்றார்.
பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மேற்குவங்க மாநிலத்துக்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அவர் ஏசியாட்டிக் சொசைட்டி அமைப்பின் 225ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மேலும், நாளை நடைபெறும் ஹூக்ளியில் உள்ள உத்தர்பாரா ஜெய் கிருஷ்ணா பொது நூலகத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.