Publish Date: Sat, 23 Aug 2008 (12:08 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (12:07 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் நில விவாகரம் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் இந்து அமைப்புகளுக்கு எதிராக சில பிரிவினைவாத முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள 3 நாள் பந்த் இன்று தொடங்கியது. இதனால், காஷ்மீரில் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
ஸ்ரீநகரில் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், வங்கிகள், கலிவி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையே அமர்நாத் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கும், அமர்நாத் நில ஆதரவு அமைப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதனால் ஜம்மு, சம்பா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
ஹிராநகர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக ஊடரங்கு நீடித்து வருகிறது. கித்வார் நகரில் 6 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.