Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரி பயங்கரவாதம்: ‌சிவரா‌ஜ் பாட்டீல் எச்சரிக்கை!

உயிரி பயங்கரவாதம்: ‌சிவரா‌ஜ் பாட்டீல் எச்சரிக்கை!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:32 IST)
உயிரி பயங்கரவாதத் தாக்குதல் சா‌த்‌திய‌ம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் தயாரித்து வழங்கிய உயிரியல் பேரழிவு மேலாண்மை மீதான தேசிய அளவிலான வழிகாட்டிகளை வெ‌ளி‌யி‌ட்டு பே‌சிய பா‌ட்டீ‌ல், உ‌யி‌ரி பய‌ங்கரவாத‌ம் சவால்களை சந்திக்க மத்திய மா‌நில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தினார்.

மனிதனை அழி‌க்கு‌ம் உத்தியாக உயிர் தொழில் நுட்ப‌‌ம் பயன்பட‌க்கூடிய ஆபத்தையும், இதற்காக மரபணுவியலை ஒரு ஆயுதமாக பயன்படு‌த்த முடிவதற்கான சாத்தியத்தையும் அவர் வலியுறுத்தி எச்சரிக்கை செய்தார்.

இந்த நவீன பயங்கரவாத‌ம், இயற்கை பேரழிவுகளை சந்திக்க மத்திய மா‌நில அரசுகளு‌க்கு இடையேயும், மா‌நிலத்திற்குள் உள்ளூர் அமைப்புக‌ளு‌க்கு இடையேயு‌ம் ஒருங்கிணைப்பு வலு‌‌ப்பட வே‌ண்டியத‌ன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

உயிரியல் பேரழிவு மேலாண்மை மீதான தேசிய அளவிலான வழிகாட்டி‌யி‌ல், சுகாதாரம், உடனடியான ‌சி‌க்க‌ல்க‌ள் மற்றும் பாதிப்பு, மன ஆரோக்கியம், உளவியல் ஆதரவு, சவால்களை சந்திக்க சமூக அளவிலான விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil