ஜம்முவில் இன்று இயல்பு நிலை திரும்பியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
ஜம்மு மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாகவும், தேவைப்பட்டால் நள்ளிரவு வரை தளர்வு நீட்டிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதம்பூர், சம்பா மாவட்டங்களில் பகல் நேரத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், அரசு அலுவலகம் ஒன்றும், காவல்துறை மற்றும் பொது மக்களின் வாகனங்கள் சிலவும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.