விமான நிலையங்களை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விமான நிலைய ஆணையகம் சார்பில் நடத்தப்படும் 12 மணி நேர வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. இதனால் விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரியும் விமான நிலைய ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 7மணிக்கு தொடங்கிய இப்போராட்டத்தின் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த போராட்டத்தின் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.