Newsworld News National 0808 19 1080819032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

139 வயது முதியவர் ஹபீப் மியான் மரணம்!

Advertiesment
ஜெய்ப்பூர் லிம்கா சாதனை 139 வயது ஹபீப் மியான்
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (13:43 IST)
லிம்கா சாதனைப் புத்தகத்தில் மிகவும் வயதான மனிதர் என இடம்பெற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 139 வயது முதியவர் ஹபீப் மியான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நேற்று அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து மதியம் 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தனது 139வது பிறந்த தினத்தை (மே 13ஆம் தேதி) கொண்டாட ஹபீப் மறுத்து விட்டார்.

அரசுசாரா நிறுவனம் ஒன்று மே 20ஆம் தேதி அவரது பிறந்த தினத்தை கொண்டாட முன்வந்த போதும் மீண்டும் மறுப்பு தெரிவித்த ஹபீப், தொடர்பு குண்டு வெடிப்பில் பல உயிர்களை இழந்ததே தனது வாழ்நாளில் ஜெய்ப்பூரில் நடந்த மிகக் கோரமான சம்பவம் என்று வருத்தத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil