Newsworld News National 0808 18 1080818069_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெற்கு ரயில்வே காவ‌ல் அ‌திகா‌ரி‌க்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!

Advertiesment
தெற்கு ரயில்வே ஜி.எம்.பி. ரெட்டி பிரதீபா தேவிசிங் பாட்டீல்
, திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (19:23 IST)
தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை பாதுகாப்பு கமாண்டன்டி.எம்.ி. ரெட்டிக்கு சிறந்த பணியாற்றியதற்காக குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பதக்கத்தை டெல்லியில் நட‌ந்சுதந்திர தின விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் அவருக்கு வழங்கினார்.

ரயில்வே வாரியத்தின் இயக்குனர் (விசாரணை) சஞ்சய் கிஷோர், என்.எப். ரயில்வேயைச் சார்ந்த பாதுகாப்பு அதிகாரி கே.ி. மாவோ, பிலாஸ்பூரை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ராம்சிங் தாமர், வடக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ராம் யாதவ், மும்பை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சத்தியநாராயண் குர்ஜால், நாக்பூரைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ரஞ்சன் குமார் மான்டல், பட்டியாலாவைச் சேர்ந்த ஆய்வாளர் சத்பீர் சிங், கரஹராவைச் சேர்ந்த ராம்மிலன் திவாரி ஆகியோருக்கும் சிறந்த பணியாற்றியதற்காக குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil