பார்சி புத்தாண்டுப் பண்டிகையான நவ்ரோஜ் நாளை கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்களுக்கு குறிப்பாக பார்சி இன சகோதர, சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதாகவும், இப்புத்தாண்டு மகிழ்ச்சியையும், வளத்தையும் பெருக்கி நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவ்ரோஜ் பண்டிகை அர்ப்பணிப்புடனும், பாரம்பரியத்துடனும் கொண்டாடப்படுவதாகவும், நமது பன்முக கலாச்சாரத்தின் தன்மைகளான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் இது பிரதிபலிப்பதாகவும், இந்த புத்தாண்டு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்றும் கூறியுள்ளார்.