Publish Date: Mon, 18 Aug 2008 (11:56 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேரிடம் காவல் துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் அளித்த தகவலையடுத்து இந்த இரண்டு மாணவர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது ஜெய்ப்பூர் மற்றும் மற்ற இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு உள்ள நேரடி, மறைமுக தொடர்பு பற்றி விரிவாக விசாரணை நடத்தியதாக அந்த தகவல்கள் வெரிவிக்கின்றன.
வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இது பற்றி ஊடகங்களுக்கு மேலும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
Webdunia
Publish Date: Mon, 18 Aug 2008 (11:56 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)