ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இரண்டு மேஜர், ஒரு ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கிழக்கு லடாக் பகுதியில் மீட்பு நடவடிக்கை பணியை முடித்து விட்டு 'லே' நோக்கி திரும்பி கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக கிழக்கு லடாக் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் மேஜர் பத்மநாபன், கணபதி, ராணுவ வீரர் நர்சையா உள்பட 3 பேர் பலியானர்கள் என்று பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.