அஸ்ஸாம் மாநிலம் பொங்கைகான் மாவட்டத்தில் இன்றும் இரண்டு இடங்களில் உல்பா தீவிரவாதிகள் வைத்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுகள் வெடித்தது.
பொங்கைகான் மாவட்டம் ஸ்வாகித்பேடி என்னுமிடத்தில் காவல் துறை சோதனைச் சாவடி அருகே இன்று காலை 8.10 மணியளவில் முதல் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து பகலதான் என்ற இடத்தில் அடுத்த 5 நிமிடங்களில் இரண்டாவது குண்டு வெடித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சேத விவரம் பற்றி தகவல்கள் இல்லை.
நேற்று சுதந்திர தின கொண்டாடட்டத்தின் போது, அஸ்ஸாம் மாநிலத்தின் சிராங், துப்ரி மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடந்த இடத்திற்கு அருகே 3 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்த இரண்டாவது நாளாக இன்றும் இரண்டு குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.