Newsworld News National 0808 14 1080814077_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிர‌ச்சனைகளு‌க்கு‌ப் பே‌ச்சுதா‌ன் ‌தீ‌ர்வு- வ‌ன்முறைய‌ல்ல : குடியரசு‌த் தலைவ‌ர்!

Advertiesment
பேச்சு வார்த்தை குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல்
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:13 IST)
பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. பிரச்சனைகள் எங்கு இருந்தாலும், அதை அமைதி வழியில் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எ‌ன்று குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

நமது நா‌ட்டி‌ன் 62 ஆவது சுத‌ந்‌திர ‌தின‌‌த்தை மு‌ன்‌னி‌ட்டு குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் நா‌ட்டு ம‌க்களு‌க்கு ஆ‌ற்‌றிய உரை வருமாறு:

வன்முறை எந்த வடிவம் ஆனாலும் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நம் நாட்டில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு உயிர்களை அழித்து, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்த சம்பவங்க‌ள் நடந்துள்ளன. பிரச்சனையோ, காரணமோ எதுவாக இருந்தாலும், வன்முறைக்கு நமது சமுதாயத்தில் இடம் இல்லை.

பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. அமைதி வழியும், சமாதானமும் சிக்கலாகவோ, கடினமானதாகவோ இருக்கலாம். ஆனால் அதை நாம் கடைபிடித்தாக வேண்டும். பிரச்சனைகள் எங்கு இருந்தாலும், அதை அமைதி வழியில் பேச்சு வார்த்தை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்களின் பொருளாதார, அதிகார நிலையை உயர்த்துவதற்கு கூட்டுறவு அமைப்புகளையும், சுயஉதவிக் குழுக்களையும்விட சிறந்த வழி வேறில்லை. அவர்களுக்கு கடனுதவி, உற்பத்தி, விற்பனை உதவி சீராக அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, இந்த முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுவதும், வலுப்படுத்தப்படுவதும் அவசியம். இது நாடு தழுவிய இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.

வரதட்சணை, பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடு, பெண் சிசுக்கொலை, குடும்ப வன்முறை, மது, போதை பழக்கங்களுக்கு அடிமையாவது போன்ற அனைத்து தீய பழக்கங்களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

நமது நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பேர் இப்பழக்கத்தால் இறக்கின்றனர். புகையிலை தொடர்பான புற்றுநோய், இதய, நுரையீரல் நோய்களால், ஆறாண்டுகளுக்கு முன்பு ரூ.30,800 கோடி செலவாகியிருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தத் தொகை அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் இப்பழக்கங்களை ஒழிக்கும் திட்டத்தை வகுக்க வேண்டும்.

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் அளிக்க வேண்டும். நமது விஞ்ஞானிகளும், வேளாண் ஆராய்ச்சிக் கூடங்களும் இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்த பாடுபட வேண்டும். வேளாண்-உயிரி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவில் என்றும் பசுமைப் புரட்சி நிலவ வேண்டும்.

வளரும் நாடான இந்தியாவின் ஆற்றல் தேவஅதிகரித்துக் கொண்டே போகிறது. வளர்ச்சியின் உயர்ந்த நிலைகளை எட்டுவதற்கு ஆற்றல் பற்றாக்குறை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பருவநிலை மாற்றங்கள் ஆகியவை பெரும் சவால்களாக இருக்கும் சூழ்நிலையில் ஆற்றல் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. நீண்டகால தேவைக்கேற்ப ஆற்றல்களின் வகைகளை பயன்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதற்கு ஏற்ற மாற்றங்களை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.

புதிய வகை ஆற்றல்களை கண்டுபிடிப்பது தேசிய அளவிலான இயக்கமாக மாற வேண்டும். ஆற்றலை திறம்பட பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். ஆற்றலை பாதுகாக்கும், சேமிக்கும் வகையில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிரவாதம் என்பது உலகம் முழுமைக்கான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நம் நாடு மட்டுமல்லாமல் உலகளவில் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. மனித உயிர் என்பது தீவிரவாதிகளின் பார்வையில் அற்பமாக தெரிகிறது. இதனால் வன்முறையையும் அழிவுச் செயல்களையும் தொடர்ந்து தூண்டி வருகின்றனர். ஆனாலும், தீவிரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுக்கப்படுவது துரதிர்ஷ்ட வசமாகும். சமீபகாலமாக உலகின் பல நாடுகளும் தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

வலுவான நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நாம் உறுதி ஏற்றிருக்கிறோம். தீவிரவாதத்தை நம் மண்ணில் இருந்து முற்றிலுமாக அகற்ற அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். இந்த உறுதியில் பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரிவினைக் கொள்கை கொண்ட தீவிரவாதிகளின் எண்ணம் பலிக்காது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் பங்கேற்றிருக்கிற அனைத்து வீரர், வீராங்கனைகளையும் வாழ்த்துகிறேன். தனிநபர் பிரிவில் இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக தங்கப்பதக்கம் பெற்றிருக்கும் அபிநவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இ‌வ்வாறு குடியரசு‌த் தலைவ‌ர் தனது சுத‌ந்‌திர ‌தின உரை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil