புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜையை முன்னிட்டு வருகிற 16-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அடுத்த நாளான 17-ஆம் தேதி முதல் வழக்கமான கணபதி ஹோமம், உசபூஜை, உச்சிகாலப் பூஜை, அத்தாள பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய் அபிஷேகம் ஆகியவை நடக்கும்.
இதையடுத்து 21-ஆம் தேதி ஆவணி பூஜை முடிவடைந்து நடை சாத்தப்படுகிறது. இதற்கிடையில், 17- ஆம் தேதி வரும் சந்திர கிரகணத்தால் கோயில் நடை திறப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தேவஸம் வாரியம் தெரிவித்துள்ளது.