Publish Date: Thu, 14 Aug 2008 (18:59 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (18:59 IST)
ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலையை வணிகத்திற்குத் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி எச்சரித்துள்ளது.
"ராணுவத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்ரீநகர்- முசாபராபாத் நெடுஞ்சாலையை வர்த்தகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்" என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.
முசாபராபாத் சாலையை வர்த்தகத்திற்குத் திறந்துவிடுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் பேச்சு நடத்தத் தேதி குறிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தங்களது இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக மக்களே போராட்டத்தில் குதித்துள்ளனர் என்றார்.
Webdunia
Publish Date: Thu, 14 Aug 2008 (18:59 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (18:59 IST)