சென்னை இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தை ரூ.1808 கோடி மதிப்பில் நவீனப்படுத்தி விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நவீனப்படுத்துதல், விரிவாக்குதலுடன் ஆகியவற்றுடன், பன்னாட்டுத் தர விதிகளின்படி ஆண்டிற்கு கூடுதலாக 14 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனுள்ள முனையம் ஒன்றும் கட்டப்பட உள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கிப் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், "பெரிய விமானங்களைக் கையாளும் வகையில் இரண்டாம் ஓடுதளம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
விமான நிலைய விரிவாக்கம், நவீனமாக்கப் பணிகள் துவங்கி 26 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றார் அவர்.