Publish Date: Tue, 12 Aug 2008 (17:40 IST)
Updated Date: Tue, 12 Aug 2008 (17:39 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்தியப் படையினரின் கண்காணிப்பு அரண்களின் மீது பாகிஸ்தான் படையினர் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்து இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
"பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸ்வஜியான் துணைப் பிரிவில் பிரச்சார் என்ற இடத்தில் இந்தியப் படையினரின் பாதுகாப்பு அரண் மீது திங்கட்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய ராக்கெட் தாக்குதல் குறித்து அந்நாட்டு உயர் அதிகாரிகளிடம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்" என்று இந்தியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ள சக்கான்- தா பாக் என்ற இன்று இடத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில்தான் பாகிஸ்தான் தரப்பிடம் இந்தியா தனது இந்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்து விழுந்த ராக்கெட்டுகளின் பாகங்களையும் ஆதாரமாக இந்திய அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 12 Aug 2008 (17:40 IST)
Updated Date: Tue, 12 Aug 2008 (17:39 IST)