Publish Date: Mon, 11 Aug 2008 (11:19 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் 'ஏர்ரைபிள்' இறுதிச் சுற்றில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலைத் தொடங்கிவைத்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் அபினவ் பிந்த்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சீனாவின் சூ குயினன் மொத்தம் 699.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடிய பின்லாந்தின் ஹென்றி ஹக்கினென் வெண்கலப் பதக்கம் வென்றார்.
Webdunia
Publish Date: Mon, 11 Aug 2008 (11:19 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)