Publish Date: Fri, 08 Aug 2008 (19:19 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (19:19 IST)
விமானம் மீது பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விஜயவாடாவில் இருந்து ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாத் நோக்கிச் சென்ற இந்த தனியார் விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு உள்பட 65 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது. இதையடுத்து விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த வெங்கையா நாயுடு உள்பட 65 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஞானாவரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பிற்பகல் 1 மணியளவில் பறவை மோதியதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதாக விமானத்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.