கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு, முதலில் ஒகேனக்கல்லில் கூட்டு சர்வே நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறியுள்ளார்.
ஒகேனக்கல் விவகாரம் குறித்து ஷிமோகாவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அதைப் பெறாமலேயே திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது" என்றார்.
"ஒகேனக்கல்லில் எல்லைகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள முதலில் கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதன் பிறகுதான் குடிநீர்த் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது." என்று அவர் குற்றம்சாற்றினார்.
மேலும், குடிநீர்த் திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகவும், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.