Publish Date: Wed, 06 Aug 2008 (16:58 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சியின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.
"ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடந்த காலங்களில் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பை மீண்டும் தடை செய்வது நியாயமற்றம் என்று நான் கருதவில்லை" என்று காங்கிரஸ் பேச்சாளர் ஷகீல் அமீது கூறியுள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சராகவும் உள்ள ஷகீல் அகமது, இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மட்டுமே தெரிவித்துள்ளேனே தவிர அரசின் சார்பில் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Webdunia
Publish Date: Wed, 06 Aug 2008 (16:58 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)