1975இல் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தை விட மோசமான சூழ்நிலை தற்போத ஜம்முவில் நிலவுகிறது என்றும், இதற்கு ஆளுநர் என்.என்.வோராதான் காரணம் என்றும் பா.ஜ.க. குற்றம்சாற்றியுள்ளது.
"முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூப் முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களின் விருப்பத்திற்காக ஆளுநர் வோரா செயல்படுகிறார்" என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. வின் மூத்த தலைவருமான சாமன் லால் குப்தா கூறியுள்ளார்.
ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறை நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்று அவர் குற்றம்சாற்றி உள்ளார்.