Publish Date: Fri, 01 Aug 2008 (18:34 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (18:33 IST)
புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் வழக்கம் போல் தொடர்ந்து சமையல் எரிவாயு இணைப்பைப் பெறலாம் என்றும் மத்திய பெட்ரோலியம், எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகள் பற்றி மத்திய பெட்ரோலிய, எரிவாயு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது பற்றிய பிரச்சினை இன்று அமைச்சகத்தால் ஆராயப்பட்டது. பின்னர் புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
புதிய எரிவாயு இணைப்புக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் தொடர்ந்து விண்ணப்பித்து இணைப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய பெட்ரோலியம், எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 01 Aug 2008 (18:34 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (18:33 IST)