பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு நிலவும் உள்நாடடுப் பாதுகாப்புச் சூழல் குறித்தும், தனது அகமதாபாத் பயணம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் கொழும்பில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் மண்டல ஒத்துழைப்பு மாநாடு குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.
பிரதமரும் குடியரசுத் தலைவரும் தேச, பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் பற்றி விவாதித்தனர் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.