மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சமாஜ்வாடி கட்சி இணையும் என்று வெளியான தகவலை அக்கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் மறுத்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பிடம் இருந்து அரசில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு எதுவும் வரவில்லை என்ற அமர்சிங், மத்திய அமைச்சரவையில் தான் இடம்பெறப் போவதாக வெளியான தகவலையும் மறுத்தார்.
"அமைச்சரவையில் நான் இடம்பெறுவது ஒன்றும் மனுப் போட்டு ஆகிற காரியம் அல்ல. நான் எந்த அமைச்சர் பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை. இந்தக் கேள்வியை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோரிடம் கேளுங்கள். ஊடகங்கள்தான் என்னை அமைச்சராக்குகின்றன" என்றார் அமர்சிங்.
முன்னதாக கொல்கத்தாவில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பாணர்ஜியைச் சந்தித்த அமர்சிங், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்.
அதுபற்றிக் கேட்டதற்கு, எனக்கும் மம்தாவிற்கும் இடையில் நீண்டகால உறவு உள்ளது. இது எனது தனிப்பட்ட சந்திப்பு என்றார் அவர்.