இரு தரப்பிற்கும் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கட்டாயம் மதிக்க வேண்டும் என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வலியுறுத்தியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அதிகரித்து வரும் பாகிஸ்தான் படையினரின் ஊடுருவல் கவலை அளிக்கிறது என்று கூறியுள்ள அமைச்சர் அந்தோணி, இந்த அத்துமீறல் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்றார்.
இரு நாட்டிற்கும் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கண்டிப்பா மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல்களை கீழ்மட்ட படையினர் கலந்தாய்வு கூட்டங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டங்கள் ஆகியவற்றிலேயே பாகிஸ்தான் சரிசெய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அந்தோணி கூறினார்.