"நரேந்திர மோடிக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் விடுத்துள்ள சவால்தான் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு" என்று சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
"பாதுகாப்புப் படையினர் கொடி அணி வகுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதை விட்டுவிட்டு, இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்கு மோடி சாட்டை எடுக்க வேண்டும்" என்று சிவசேனா கட்சி இதழான 'சாமனா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் பால் தாக்கரே கூறியுள்ளார்.
"இந்திய மண்ணில் நடக்கம் ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதல்களில் எப்போதும் பாகிஸ்தானிற்கு முக்கியப் பங்கு உள்ளது. உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தானை நீக்கினால் மட்டுமே, இஸ்லாமிய பயங்கரவாத வடிவத்தில் உள்ள எதிரியை ஒழிக்க முடியும். இந்தியாவின் உண்மையான நண்பனாக உருமாறியுள்ள அமெரிக்கா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய நாடுகள் இதைச் செய்ய முடியும்." என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.
மருத்துவமனைகளைக் கூட விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகளின் குரூர முகத்தைக் கண்டு, தற்சமயம் குஜராத் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்றும் பால் தாக்கரே கூறியுள்ளார்.