Newsworld News National 0807 29 1080729030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேச‌த்‌தி‌ன் நல‌ன் மு‌க்‌கிய‌ம்

Advertiesment
வாசகரின் கருத்து தேச‌த்‌தி‌ன் நல‌ன் மு‌க்‌கிய‌ம்
, செவ்வாய், 29 ஜூலை 2008 (14:59 IST)
இந்துக்களை சீண்டிப்பார்ப்பதா? ராமகோபாலன் கண்டனம் என்ற செய்தியைப் படித்த கெளதமன் என்ற தமிழ்.வெப்துனியா.காம் வாசகர் அனுப்பிய கருத்து இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

கெளதம் :

நாட்டில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழக்கின்றனர். தவறே செய்யாதவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இந்த சமயத்தில் நாட்டின் முக்கியப் பிரச்சினையை ஒதுக்கிவிட்டு, சமயம், மதம் என்று பறைசாற்றிக் கொண்டிருப்பதுதான் அரசியல்வாதியின் பணியா?

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள இந்த சமயத்தில், தனது தனித்துவத்தை நிரூபிக்க இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

இவர்கள் நாட்டை விட தன்னைப் பற்றியும், தனது கொள்கைகளைப் பற்றியும்தான் அதிகமாகக் கவலைப்படுகின்றனர்.

ராமரின் ராஜசபையில் எத்தனையோ சிறப்பியல்புகள் இருந்தன. அவற்றையெல்லாம் எந்த ஆட்சி தந்துவிடப் போகிறது.

முதலில் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதை உணருங்கள். இந்தியர்களாக இருங்கள்.

நீங்கள் செய்வீர்களாக ராமகோபாலன்? எ‌ன்று வாசக‌ர் கே‌ள்‌வி ‌விடு‌த்து‌ள்ளா‌ர். அவ‌ரது இ‌ந்த கரு‌த்து‌க்கு‌க் காரணமான செ‌ய்‌‌தி ‌கீழே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

???????????? ??????????????????????? ???????????? ?????????! <http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0807/26/1080726044_1.htm>


விரை‌வி‌ல் வாசக‌ர் கரு‌த்து எ‌ன்ற த‌னி‌ப் ‌பி‌ரிவு துவ‌க்க‌ப்ப‌ட்டு, அ‌தி‌ல் வாசக‌ர்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் ‌சிற‌ந்த கரு‌த்து‌க்க‌ள் வெ‌ளி‌யிட‌ப்பட உ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil