கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது.
லட்சத்தீவிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக வைத்திரியில் 20 செ.மீ., பீர்மேட்டில் 15 செ.மீ., மூனாரில் 13 செ.மீ., நீலம்பூரில் 11 செ.மீ. என்றவாறு மழை பதிவாகியுள்ளது.
மணந்தவாடி, கோட்டயம் பகுதிகளில் 9 செ.மீ. மழையும், பெரிந்தல்மன்னா, வைக்கம் பகுதிகளில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோணி, காஞ்சிரப்பள்ளி, குப்பாடி, மஞ்செரி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும், கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.