திப்ருகார்க்: அஸ்ஸாமில் இயங்கி வரும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் 32 பேர் ஆயுதங்களை ஒப்படைத்த ராணுவத்தினர் முன்பு சரணடைந்தனர்.
உல்பா, குகி, ஆதிவாசி, போடோ, திமாசா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் 15 பேர் திஞ்சன் முகாமில் உள்ள ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர்.
இயக்கவாரியாகத் தீவிரவாதிகளின் எண்ணிக்கை விவரங்களையும், அவர்களின் பெயர் மற்றும் ஒப்படைக்கப்பட்ட ஆயுத விவரங்களையும் ராணுவத்தினர் வெளியிடவில்லை.