வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் முழுஅளவிலான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த சூரிய கிரகணம் பாதியளவில் தெரியும்.
வட அமெரிக்காவின், வடக்கு, கிழக்குப் பகுதிகள், கிரீன்லாந்து, வடக்கு ஐரோப்பா, ஆசிய நாடுகளில் ஜப்பான் தவிர மற்ற பகுதிகளில் பொதுவாக முழு சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். இந்தியாவில் இது பாதியளவிற்கு மட்டுமே தெரியும்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்க்கோட்டில் வருவதுதான் சூரிய கிரகணம் ஆகும். இந்த நிழலானது மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் நகரும் என்பது கூடுதல் தகவல்.
கனடாவின் நியூ பவுண்ட்லேண்ட் மாகாணத்தின் அருகே உள்ள வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சூரிய உதய புள்ளியில், இந்திய நேரப்படி பிற்பகல் 1.34 மணிக்கு சந்திரனின் நிழல் பூமியின் மீது விழத்தொடங்குகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உள்ள சூரிய மறைவுப் புள்ளியில், இந்திய நேரப்படி மாலை 6.08 மணிக்கு இந்த சூரிய கிரகணம் மறைகிறது.
அடுத்த முழு சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஏற்படுகிறது. இதன் சாய்வுப் பாதை இந்தியா வழியாகச் செல்கிறது.