Publish Date: Mon, 28 Jul 2008 (13:06 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (13:06 IST)
மணிப்பூரில் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு இம்பாலில் ஹியாங்தாங் என்ற இடத்தில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கார் ஒன்றை நிறுத்த முயன்றபோது, அதில் இருந்தவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இதில் காரில் இருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏ.கே.56 துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், தெளபால் மாவட்டத்தில் லிலாங் குனவ் என்ற இடத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் ஒன்றுபட்ட மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டான் என்று பாதுகாப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 28 Jul 2008 (13:06 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (13:06 IST)