Publish Date: Sat, 26 Jul 2008 (19:19 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (19:19 IST)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபு நகர் ரயில் நிலையத்திற்கு அருகிலும், மணி நகர், ஜவஹர் நகர், சக்லா பகுதி, அம்ரய் வாடி ஆகிய இடங்களிலும் இன்று மாலை 6.30 மணியில் இருந்து 15 நிமிட இடைவெளியில் குண்டுகள் வெடித்துள்ளன.
இதில் பல இடங்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதிக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பெங்களூருவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற குண்டுகளே இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...