Publish Date: Sat, 26 Jul 2008 (16:03 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (15:55 IST)
மத்திய காஷ்மீரில் 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், பயாஸ் அகமது பட் மற்றும் இம்ரான் ரஷீத் லோன் ஆகிய இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆவணங்கள் சிலவும், கையேறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.