பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் முக்கிய வெடி பொருளாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பது முதல்கட்டச் சோதனையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு நகரத்திற்கு நேற்றிரவு வந்து சேர்ந்த மத்தியப் பாதுகாப்புப் படை வல்லுநர்கள் மேற்கோண்ட சோதனையில், வெடிகுண்டுகளில் தரம் குறைந்த அம்மோனியம் நைட்ரேட் முக்கிய வெடி பொருளாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு சிறிய வகை நேரக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.