கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், "பெங்களூருவில் இன்று நடந்த குண்டு வெடிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடகா அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறது. இந்த குண்டு வெடிப்பால் தேச விரோத சக்திகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் உறுதியான நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.
பெங்களூருவிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒருவர் பலியானதுடன், 15 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.