Publish Date: Fri, 25 Jul 2008 (14:47 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (14:47 IST)
பெங்களூரில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரில் அசோக் நகர், காந்தி நகர், மடிவாலா, நயந்தஹல்லி ஆகிய 4 இடங்களில் இன்று மதியம் 1.30 மணியளவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.
2 முதல் 12 நிமிட இடைவெளியில் நடந்துள்ள இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை அடுத்து பெங்களூர் நகரம் முழுவதும் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளன.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Webdunia
Publish Date: Fri, 25 Jul 2008 (14:47 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (14:47 IST)