Publish Date: Thu, 24 Jul 2008 (13:56 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (13:55 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பேட்மல்லோ என்னுமிடத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 5 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் நேற்று நள்ளிரவு நடந்த கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலில் 2 மத்திய கூடுதல் காவல் படையினர் (CRPF) உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
நூர்பாக் குமர்வாரி என்னுமிடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மத்திய கூடுதல் காவல் படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்ற இந்த தாக்குதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 24 Jul 2008 (13:56 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (13:55 IST)