இந்திய எல்லையில் சில இடங்களில் சீனப் படையினரின் ஊடுருவல் தொடர்கிறது என்றும், இதற்குப் பேச்சின் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி மீண்டும் கூறியுள்ளார்.
"சீனப் படையினரின் ஊடுருவல் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இப்பிரச்சனைக்கு சீனாவுடன் பேச்சு நடத்தி சுமூகமான முறையில் தீர்வு காண கடந்த 2 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார் அவர்.
இதுவரை சீன அரசுடன் 11 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் அந்தோணி, எல்லைப் பிரச்சனை தீரும் வரை தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என்றார்.