மக்களவைத் தேர்தல் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள அட்டவணைப்படி மே 2009 இல் நடக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அரசிற்கு வந்த ஆபத்துக்கள் நீங்கி விட்டன என்றும், இது நாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முன்கூட்டி வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது என்றார் அவர்.