Publish Date: Tue, 22 Jul 2008 (18:01 IST)
Updated Date: Tue, 22 Jul 2008 (17:59 IST)
சமாஜ்வாடி கட்சி தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாக கூறி அவையில் பா.ஜ.க. வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த பணத்தைக் கொட்டிய விவகாரம் குறித்து பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.
தங்களுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சமாஜ்வாடி கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. வினரின் குற்றச்சாற்று ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.
மத்திய அரசின் இந்த முறைகேடு தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். தங்களுக்கு லஞ்சமாக அளிக்கப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியை பா.ஜ.க. எம்.பி.க்கள் அவையில் காட்டியதாகவும் அவர் கூறினார்.
இன்றைய நாள் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அவமானகரமான நாள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் எம்.பி. கூறியுள்ளார்.