Newsworld News National 0807 22 1080722033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேதுக் கால்வாய் வழக்கு: தள்ளிவைக்க உச்ச நீதி மறுப்பு!

Advertiesment
சேதுக் கால்வாய் உச்ச நீதிமன்றம் சேதுக்கால்வாய் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்
, செவ்வாய், 22 ஜூலை 2008 (13:21 IST)
மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், சேதுக் கால்வாய் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது, திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்து நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி எங்களுக்கென்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது, எங்கள் கவலையெல்லாம் வழக்குகளைப் பற்றி மட்டும்தான்” என்று கூறியது.

Share this Story:

Follow Webdunia tamil