மக்களவையில் நாளை நடைபெற உள்ள ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் 2 நாள் சிறப்புக் கூட்டம் மக்களவையில் இன்று துவங்கி நடந்து வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காது என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசுக்கு தேவையான பெரும்பான்மையின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என்பதால், மம்தாவின் நடவடிக்கை மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.