Publish Date: Sat, 19 Jul 2008 (18:34 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (18:33 IST)
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பாராமுல்லா சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் நர்பால் பகுதியில் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து கண்ணிவெடியில் சிக்கியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
Webdunia
Publish Date: Sat, 19 Jul 2008 (18:34 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (18:33 IST)