Publish Date: Sat, 19 Jul 2008 (18:14 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (18:13 IST)
காஷ்மீரில் அத்துமீறி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் இன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், குப்வாரா மாவட்டம் மக்கில் பள்ளத்தாக்குப் பகுதியில் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தீவிரவாத குழுவினர் அத்துமீறி நுழைய முயன்றதைப் பார்த்தனர்.
அப்போது, அவர்களைச் சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதை மீறி தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கிச் சுடத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலுக்குச் சுட்டனர்.
இந்த மோதலில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Sat, 19 Jul 2008 (18:14 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (18:13 IST)